Sunday, August 30

காதல் - தினம் - கோபால் (சிறுகதை) - 2


"வாடா ... என்ன லேட்?" - கதவை திறந்த சுந்தர் கோபாலை இப்படித்தான் வரவேற்றான். ஆனால் கோபால் இதை சட்டை செய்ததுபோல் தோன்றவில்லை. நேரே அவன் உள்ளே வந்து ராஜு இருக்கிறானா என்பதை பார்க்கிறான். நான் இருப்பதை கவனித்தானா என்பது கூட சந்தேகம்தான்.


"மச்சான் ... இது ரொம்ப பர்சனல் டா!"

தயங்கிக்கொண்டே கோபால் சொல்கிறான்.

"சரி நாம அந்த ரூம்ல போய் பேசுவோம்"

நால்வரும் எழுந்து உள்ளே ஒரு அறைக்கு செல்கிறோம். ராஜு, கோபாலின் அருகே உட்காருகிறான். நானும் சுந்தரும், இரு வேறு மூலையில் ஒரு முக்காலிமேல் அமர்கிறோம். அவ்வறையில் சூழ்திருந்த தவமோனத்தில், புத்தக இடுக்கில் குடிகொண்டிருந்த கொசுக்களின் "ஙொய்", ஒலிபெருக்கியில் பிளிரும் சப்தமாய் பலமாக கேட்டுக்கொண்டிருக்கிறது. பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்ற தயக்கம் எங்களிடையில். ராஜு தொடங்குவான் என்பதற்காகவே காத்துக்கொண்டிருக்கிறோம். அதுதான் இயல்பு. ஆனால் ராஜு கோபாலையே பார்த்துக்கொண்டிருக்கிறான். கோபாலின் கண்களும் தரையும் சோககீதம் பாடிக்கொண்டிருக்கிறது.

"படார்"

விழித்தெழுந்தவர் போல் எல்லோரும் சுந்தரின் திக்கை நோக்கி திரும்புகிறோம். "கொசு" என்று வழிகிறான். சுந்தர் பொறுமையிழந்து கொசுவினை ஒரே போடாக போட்டிருக்கிறான். உயிரியல் புத்தகம் என்று நினைக்கிறேன். அதுதான் கொஞ்சம் தடுமனாக இருக்கும். அமைதியாய் கடந்த பொழுதின் அளவை உணர்ந்தவன் போல் பேசத்தொடங்குகிறான் கோபால்.

"இப்போ நான் சொல்றத யார்கிட்டயும் சொல்ல வேண்டாண்டா ... ப்ளீஸ்"

அவன் சொன்னது ராஜுவிடம் மட்டும்தான். இருந்தாலும் எங்கள் எல்லோருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். ராஜுவும் அதை ஆமோதித்தவாறு தலையசைக்கிறான்.

"அன்னிக்கி ஸ்ரீ திடீர்னு வீட்டுக்கு கால் பண்ணிர்ந்தா ... பாட்டி தான் எடுத்தா ... நான் அப்ப ப்ராக்டீஸ் பண்ணின்டிருந்தேன்"

(அன்றைக்கு ஒரு கால்பந்தாட்ட போட்டி இருந்தது)

"பாட்டி என்ன உள்ள கூப்டா ... நான் யாருன்னு கேட்டேன் ... ஸ்ரீனு சொன்னா ... இப்ப என்னத்துக்கு இவ போன் பண்றான்னு யோசிச்சேன் ... ஏன்னா வாமப் (warm up) பண்ணும்போது டிஸ்டப் பண்ணா எனக்கு புடிக்காதுன்னு உனக்கு தெரியும்ல"

(இது ஏதோ எங்களை நம்பவைப்பதற்காக புனையும் கதை என்று எனக்கு தோன்றுகிறது)

"நான் வேண்டாவெறுப்பா போய் பேசினேன் ... க்ளவுஸ் கூட கழட்டலைன்னா பாத்துக்கோயேன்"

(இந்த புளுகு மூட்டையின் பாரத்தை என்னால் தாங்க முடியவில்லை)

"என்னடி அப்டின்னு கேட்டேன் ... அவ ஒண்ணும் இல்ல சும்மாதான் கூப்டேன் அப்டின்னு சொன்னா ... அப்புறம் நாங்க ட்யூஷன் சாரப்பத்தி பேச ஆரமிச்சோம் ... நம்ம அன்னிக்கி பேசிண்டிருந்தோம்ல அதேதான் ... ஸ்ரீ ஆத்துலேந்து ஃபோன் பண்ணா இவ்ளோ நாழி பேசமாட்டா, அதனால எங்கடி இருக்கனு கேட்டேன். சுப்ரஜா ஆத்துலதான்னா ... அங்க ரெண்டு பெரும் என்னடி பண்றீங்கன்னு கேட்டேன் ... ஒண்ணும் இல்ல நீ இங்க வாயேன் நான் உனக்கு ஒண்ணு காட்டணும்னு சொன்னா ... அப்டி என்னத்த காட்டபோற, உன் ஆளுக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கி வெச்சிர்க்கியானு கேட்டேன் ... மச்சான் உனக்கு தெரியாது ... ஸ்ரீயையும் உன்னையும்தாண்டா இன்னும் ஓட்றோம் ... அவ அப்பப்ப இந்த மாறி ஏதாது செய்வா ... அன்னிக்கி உன் பர்த்டேக்கு ஒரு பென்சில் டிராயிங் கூட பண்ணானு சொன்னேனே ... அத உன் கிட்ட குடுக்கணும்னு ஒரே அடம் ... எனக்கு நீ எப்டி எடுத்துப்பென்னு தெரியாது, அதனால முடியாதுனு சொன்னேன் ... சுருங்கி போச்சு அவ மூஞ்சு"

(கோபால் ராஜுவிடம் இதைசொன்னதற்கான அர்த்தம் எனக்கு புரியவில்லை. ராஜுவிடம் எதையாவது கறக்க விரும்புகிறானா? இல்லை ராஜுவிடம் நாசூக்காக எதையோ சொல்ல நினைக்கிறானா? . ராஜுவுக்கும் ஒரு பெண்ணுக்கும் லிங்க் போட்டு பேசுவார்கள் என்று எனக்கு தெரியும். அவர்களுக்கு ஒரு முறை ஃப்லேம்ஸ் (Flames) போட்டு பார்த்ததில் "காதலர்கள் (lovers)" என்று வந்ததாம். அதிலிருந்து அவனை ஃப்லேம்ஸ் ராஜு என்று கலாய்ப்பார்கள். அது ஸ்ரீ என்று எனக்கு இப்போதுதான் புரிகிறது. இரண்டுபேரும் வடகலை என்பதால்தான் ஸ்ரீ ராஜுவை சைட் அடித்தாள் என்று ஸ்ரீவத்சன் ஒரு முறை கூறியது என் நினைவிற்கு வருகிறது)

ராஜுவிடமிருந்து பெரிதாக எதிர்வினை ஒன்றும் இல்லை. ஆனால் அவனுக்குள் ஒருவிதமான சினம் இருப்பதை என்னால் உணர முடிகிறது. ராஜுவுக்கும் அவள் மேல் ஒரு இதுவா? இல்லை கோபாலுக்கும் அவளுக்கும் இருந்த அன்னியோன்னியத்தை கண்டு பொறாமையா? ராஜு எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாது "மேலே" என்றவாறு தலையசைக்கிறான். கோபால் ஏமாற்றத்துடன் தொடர்கிறான்.

"சரி விடு ... அவ ... அதெல்லாம் ஒண்ணுமில்ல நீ இங்க வாடானு சொன்னா ... நான் அய்யய்யோ மேட்ச் இருக்கு ... சரியா பிராக்டீஸ் கூட பண்ல ... இதுல தோத்தோம்னா அவ்ளோதான் அப்டின்னு சொன்னேன்"

(அவன் ஏற்றி கும்பத்தில் வைத்த அளவிற்கு இது அப்படி ஒன்றும் பெரிய போட்டி அல்ல. வாரக்கடைசியில் எப்போதும் விளையாடுவதுதான்)

"எத்தன மணிக்கினு கேட்டா ... நான் 5:30 னு சொன்னேன் ... 5:30 மணிக்குதான, இன்னும் ஒருமண்நேரம் இருக்கு, இங்க வந்துட்டு போ அப்டின்னு சொன்னா ... நான் ஹே!! ரிஸ்க்குடீனு சொன்னேன் ... டேய் வாடா!! ஓவரா ஸீன் போடாத அப்டின்னு பின்னாலேந்து சுப்ரஜா கொரல் கேட்டுது ... உடனே கேக்க பெக்கன்னு சிரிச்சுண்டே கால் கட் பண்ணிட்டா ... ஒண்ணுமே புரியாம பேந்த பேந்த முழிச்சுண்டிருந்தேன் ... நான் என்ன பண்லாம்னு பாத்தேன் ... சரி அவாள போய் பாத்துட்டு அப்டியே கிரௌண்டுக்கு போகலாம்னு நெனச்சு பாட்டிண்ட சொல்லிட்டு கெளம்பினேன் ... நான் அவா சொன்னத பத்தி எதுவுமே நெனைக்கலடா ... போற வழில்லாம் எனக்கு கேம் மட்டும்தான் மைண்ட்ல இருந்தது ... அத பத்தி மட்டும்தான் யோசிச்சிண்டுருந்தேன்"

(நாராயணா என்ன காப்பாத்து)

"பாட்டி காம்ப்ளான் தரேன்னு சொன்னதைக்கூட வேண்டாம்னு சொல்லிட்டு வேக வேகமா அவ ஆத்துக்கு போனேன். அவ அப்பா கார் அங்க இல்ல. அதனால எடுக்கறதுக்கு வசதியா இருக்குமேன்னு அங்கேயே சைக்கிள நிறுத்தினேன். நான் "சுப்ரஜா" அப்டின்னு கூப்டேன் ... யாரும் ஹால்ல இருக்கறா மாறி தெர்ல. இன்னொரு தரவ கூப்டேன். யாருமே பதில் சொல்லல. அப்டியே போயிடலாமான்னு நெனச்சேன். சங்கோஜமா இருந்தாலும் சரி எதுக்கும் ஒரு தரவ பெல் அடிச்சு பாப்போமே அப்டின்னு பெல் அடிச்சேன்"

(நெருங்கிய நண்பர்கள், நன்கு பழக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு செல்லும்போது, பெல் அடிப்பதில்லை. அதில் ஏனோ ஒரு சங்கடம் எங்களுக்கு. அதனால் கோபாலின் இந்த தயக்கம் எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை)

"பெல் மட்டும் எக்கோ கேட்டுண்டு இருந்தது. யாரும் வரல. சரி ரெண்டு பெரும் ஏதோ விளயாடரானு நெனச்சு சைக்கிள் கிட்ட போனேன். உள்ளேந்து திமு திமுனு சுப்ரஜா ஓடி வந்தா. மூஞ்செல்லாம் ஒரே வேர்வ. சிரிச்சுண்டே நீதானா அப்டின்னு கேட்டா ... நான் நீதானடி வர சொன்ன அப்டின்னு சொன்னேன். சரி சரி வா அப்டின்னு சொல்லி உள்ள இருக்குற பூட்ட தொறந்தா. பூட்டு போட்ருக்கான்னா அவ ஆத்துல யாரும் இல்லன்னு அர்த்தம். எனக்கு திடீர்னு பயமா இருந்தது. என்னனு தெர்ல. என்ன விஷயம் சொல்லேன் அப்டின்னு சொல்லிட்டு வாசப்படிலயே நின்னேன். வாடா உள்ள அப்டின்னு சுப்ரஜா கைய புடிச்சி இழுத்துண்டு போனா. ஹால்ல ஆர்.டி ஷர்மா புக்கு தொறந்து கெடந்தது, கிச்சன்ல யாருமே இல்ல. பாத்ரம் போட்டது போட்டபடி இருந்தது. இன்னிக்கி விமலா வரலியான்னு கேட்டேன் ... அவ இன்னிக்கி லீவு ... அம்மா அப்பாலாம் வெள்ளேந்து சாப்பாடு வாங்கிண்டு வந்துடுவா அப்டின்னு சொன்னா ... நாங்க கிச்சன் பக்கத்து ரூம்ல இருந்த மாடிப்படில ஏற ஆரமிச்சோம் ... கட கட னு அவ ஏறிட்டா ... அத்துனூண்டு படில நான் சுத்தி சுத்தி மேல ஏறினேன் ... ஏறி ... மேல போனேன் ... மேலதான் ... ஸ்ரீயும் இருந்தா ... ஸ்ரீ வந்து ..."

கோபால் மேலே சொல்லத்தயங்குகிறான். அமைதி எரிச்சலூட்டுகிறது. "சொல்லித்தொலயெண்டா" என்று கத்த வேண்டும் போல் இருக்கிறது. வெட்கப்படுகிறானா? வெட்கப்படுவது போல் நடிக்கிறானா? அமைதி குலையும் நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். உலகமே ஸ்தம்பித்து நின்று கோபாலின் உதடசைவிற்காக காத்துக்கொண்டிருக்கிறது. எங்கள் பொறுமையின் எல்லையை சோதனை போட்டுக்கொண்டிருக்கும் கோபாலின் நினைவு, அதன் வலிமையையும் பரிசோதித்துக்கொண்டிருக்கிறது.

நொடி, நிமிடம், மணிக்கூறு, திவசம், ஜாமம்
நேரத்தின் பரிமாணங்கள் அனைத்தும் ஒரு சீராக,
குறுகிய, அகலமற்ற பிரக்ஞையின் நெடுங்குழாயில் அடைக்கப்பட்டு வெளியே வர துடித்துக்கொண்டிருக்கிறது.
கோபாலின் சொற்களில் அதன் விடுதலை.
அவன் அசைந்தால் அசையும் அகிலம்.

அசைந்தது. நேரம் வந்தது.

கோபால் அன்றைய நிகழ்வுகளை ஒரு சேர கூறுகிறான்.

சொற்கள் அவன் வாயிலிருந்து,
பற்களை தாண்டி,
உதடுகளோடு உரசி,
எச்சில் துளிகளின் நீர்க்கோட்டைக்குள்,
சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு வெளியே தெரிக்கப்படுகிறது.

அருகிலிருந்த சதைகளின் மேலும், சாதனங்களின் மேலும் மோதி வெடித்து சின்னாபின்னமாக்கப்பட்ட கோட்டையின் உள்ளிருந்து வெளிப்பட்ட நீர், அமிலமாகி, அனைத்தையும் விழுங்கி கொண்டிருக்கிறது. என்னை சுற்றி இருந்த உலகம், நீரினூடெ கலந்த தூரிகயைப்போல் வரி வரியாக குழைந்து அங்கிருந்த மனிதர்களையும், பொருட்களையும், சுவற்றையும், சுற்றுப்புறத்தையும் கரைத்து புசிக்கிறது. கூண்டிலிருந்து வெளிப்பட்ட பாதரச துளிகளாய், சொற்கள் ஒன்றையொன்று தேடிக்கொண்டு தரையில் ஊர்ந்து, அதன் இனத்துடன் ஒட்டிக்கொள்கிறது.

துளிகள் சிற்பமாய்
சிற்பம் பூதமாய்
பூதம் பூலோகமாய்
பூலோகமே ஒரு திரையாய்
திரையில் தோன்றும் காட்சியாய்
இப்போது
அனைத்தும்
என் கண் முன்.

ரம்மியம்.

இரு நிர்வாண உடல்கள் என் முன்னே. முகமில்லை. அது அவசியமும் இல்லை. இரு உடல்களும் நேரெதிர் நின்று, புதிதாக முளைத்த மார்பகங்கள் நெஞ்சுக்கூட்டில் வரைந்த பிறைச்சந்திர வளையங்கள் மறையுமாறு, ஒன்றோடொன்று மோதிக்கொண்டு, பஞ்சு போல் அமிழ்கிறது. அமிழ்ந்தெழுந்த முலைகளில், செங்குத்தாக நீட்டிக்கொண்டிருந்த காம்புகள் ஒன்றையொன்று முத்தமிட்டுக்கொள்கிறது. ஒருபக்க கைகளை கீலாய் கோர்த்து, புத்தகம்போல இரு உடல்களும் என்னை நோக்கி திறக்கிறது.

திகம்பர தரிசனம்.

கரைந்த உலகின் சிசுவாய் ஜனித்த, காரிருள் சூழ்ந்த இவ்வெற்றிடத்தில் தக தகத்துக்கொண்டிருக்கிறது அவ்விரு மேனிகள். காலிடைகளில் நேற்று முளைத்த மயிர்க்கூடைகள் உரசி ஒன்றோடொன்று சிக்கி பின்னிக்கொள்கின்றன. இரு கால்களினிடையே ஒரு கால் நுழைந்தவாறு, இரு உடலும் இருக்கிகொள்ள, முகமில்லாத தலை இரண்டும் ஒன்று சேர்கிறது. சற்றே உயர்ந்த ஒரு கை எதிரில் இருந்த மார்க்கூட்டில், தன் விரல் நகத்தைக்கொண்டு கீரியவாறு, அடிவயிற்றை நோக்கி பயணிக்கிறது. அடிவயிற்றிற்கும், பெண்குறிக்கும் இடையே இருந்த மயிர்க்காட்டில் அலைந்து திரிந்து சற்று தெற்கு நோக்கி இறங்கி மறைகிறது. உறைபனியில் குளிர்நீர் பட்டது போல் மூச்சை உள்ளிழுத்து முனங்குகிறது அந்த உடல். புயலில் சிக்கிய தோணியின் அசைவினை ஒத்திருந்தது அதன் உடலசைவுகள். அலை போல் வளைந்து நெளிந்த உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த விஷமக்கார விரல், யோனியில் வழிந்த வெள்ளத்தால் நனைந்திருந்தது. இரு உடல்களும் தத்தம் மோக மார்கங்களை கடந்து ராஸ லீலைகளில் தன்னை இழந்து கொண்டிருக்கிறது. கிளிக்கொஞ்சல் சிரிப்பினைத்தாண்டி மீன் கடிபோல் காதைக்கடித்தது ஒரு குரல்.

"வாடா"

நனைந்த விரல்களின் முனைகள் மடங்கி தன் பக்கம் எதையோ கட்டி இழுப்பதுபோல் என்னைப்பார்த்து சுண்டியது.

"உன்னத்தான் வாடா"

என்னைத்தான் அழைக்கின்றன. அம்பாக தொடுக்கப்பட்ட சொற்கள், நெஞ்சை பிளந்து, இருதயத்தில் மோக நஞ்சை பாய்ச்சுகிறது. அடிவயிற்றின் கீழ் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அந்த மதோன்மதத்தில் திளைக்க இதோ நான் வருகிறேன். திறந்த புத்தகத்தின் நடுவே செருகப்படும் மயிலிறகாய் நான் உள்ளே நுழைந்து, தலை முதல் கால் வரை வருட ஆயத்தமாகிறேன்.

"டேய்"

"ம்ம்ம்"

"என்னடா இது?"

"எது?"

"ஏண்டா இங்க வண்டிய நிருத்திர்க்க?"

சூழ்ந்திருந்த காரிருளில் பொட்டு பொட்டாய் ஓட்டை.
பளீரென்று வெளிச்சம் அதிலிருந்து வழிகிறது.
உஷ்ணம் தாங்காது இரு உடல்களும் மெழுகாய் உருகி மறைகிறது. இருண்ட சுவர்கள் செதில் செதிலாய் உடைந்து, பொடியாகி, வௌவாலைப்போல் பறக்கிறது. இயல்பு நிலை திரும்பி சுந்தரின் வீட்டு அறை அவதரிக்கிறது. நானும் நினைவு திரும்புகிறேன். கோபால் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறான். ஏதாவது உளறிவிட்டேனா? ராஜுவும், சுந்தரும் என்னையே பார்க்கிறார்கள். எனக்கு புரியாமல் நான் ராஜுவிடம் கேட்டேன்.

"என்னடா?"

"சைக்கிள எங்க நிருத்திர்க்க?"

சுந்தர் கேட்டபோது எனக்கு விளங்கிற்று. மணி 6. மாமிதான் கத்திக்கொண்டிருக்கிறாள்.

"மாடத்து கிட்டதான்"

"அங்க ஏன்டா நிருத்தர ... போய் வேறெங்கேயாவது நிறுத்து"

சுந்தர் குரலை உயர்த்தியது எனக்கு பிடிக்கவில்லை. பதில் பேச வாயை திறக்க நினைத்த அந்த க்ஷணம் ஒரு அழுகை சத்தம். கோபால் அழுகிறான். கேவி கேவி ராஜுவிடம் ஏதோ சொல்கிறான். சுந்தர், மாமியோடு பால்கனியில் தர்க்கம் செய்துகொண்டிருக்கிறான். என் கவனம் கோபால் மேல். தனக்கு நிகர்ந்ததை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறான். ஏன்? அவன் கதைகளை ரசித்தோருக்கு எழக்கூடிய ஒரு இயல்பான சந்தேகம் தான் இது. இவனா அழுகிறான் என்ற ஆச்சர்யத்திலிருந்து நான் இன்னும் மீளவில்லை.

"இதோ சொல்றேன் மாமி ... டேய் சைக்கிள எடேண்டா"

சுந்தர் முடிக்கும் முன் நான் எழுந்து

"சரி நான் கிளம்பரேண்டா" என்று கதவருகில் செல்கிறேன்.

முதன் முறையாக எல்லோர் கவனமும் என் மேல். கண் இமைகளின் மயிரில் தொங்கிக்கொண்டிருந்த கண்ணீர்த்துளிகளுடன் கோபால் என்னை பார்த்தான். என்னிடம் எதையாவது எதிர்ப்பார்க்கிறானா? "டேய்!! குடுத்து வேச்சவண்டா நீ" என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. ஆனால் அது அவனுக்கு ஆறுதல் தரப்போவதில்லை. அவனுக்கு ஆறுதல் சொல்ல நான் இங்கு வரவில்லை. "பை" என்று சொல்லி விடைபெற்றுக்கொள்கிறேன்.

"சைக்கிள் நகுத்தி வச்சிட்டு மேல வாயேண்டா" என்று சாஸ்திரத்திற்கு சுந்தர் சொன்னதை கேட்டும் கேளாமல் கீழே இறங்குகிறேன். இதோ மாடத்திற்கு அருகில் மாமியின் கோவத்தால் தவித்துக்கொண்டிருக்கிறது சைக்கிள்.

"வாடா ... இப்போதான் என் நெனப்பு வந்துதா உனக்கு"

கழண்டிருந்த செயினை சரி செய்கிறேன். சைக்கிளுக்கு நான் வந்ததில் ஒரு நிம்மதி.

"செயினை சரிபண்ணிட்டு போக மாட்ட ... இந்த மாமி என்ன கத்தியே கொன்னுட்டா ... என்னண்ட கத்தினா நான் என்ன பதில் பேச முடியுமான்ன? திடீர்னு நானே எடுத்துண்டு போய்டுவேன்னுட்டா ... கோயிலுக்கு போக வசதியா இருக்குமாம் ... நல்ல வேள நீ வந்தாயோ நான் பொழச்சேன் ... இந்த ஜம்போ குண்டியல்லாம் தாங்கிண்டு என்னால போக முடியாது"

சைக்கிள் சொன்னதை கேட்டு சிரிப்புதான் வந்தது. துளசி மாட மாமியும், "சும்மா" மாமாவும், அவரவர் பங்கிற்கு இன்னும் திட்டிக்கொண்டிருக்கிறார்கள். செவிகளை அடைந்த அவர்களின் வசை என் கவனத்தை அடையவில்லை. என் மனம், நான் கண்ட காட்சியை, நினைவுத்திரையில், மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. அந்த பொன்னிற மேனிகளின் உருவங்கள் மட்டும் என்னை ஆக்ரமித்திருந்தது. செயினை சரி செய்து சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்த வேகத்தில் மீண்டும் பறக்கிறேன். வண்டியில் உட்காராமல், என் புட்டத்தை தூக்கிக்கொண்டு, அதி தீவிரமாக பெடலை மிதிக்கிறேன். "ஏண்டா என்ன இப்டி சாவடிக்கற" என்று சைக்கிள் கதறுகிறது.
பொருட்படுத்தவில்லை.
சாலையில் வரும் பேருந்துகள் "தள்ளிப்போடா" என்று கத்துகிறது.
பொருட்படுத்தவில்லை.

விரைகிறேன்.

நத்தை மீது ஊர்ந்து கொண்டிருந்த நேரம், புரவி மேல் ஏறி மின்னல் வேகத்தில் பறக்கிறது. அதன் வாலை பிடித்துக்கொண்டு நானும் பறக்கிறேன்.
இதோ வந்துவிட்டது என் வீடு. சைக்கிளை நிறுத்தி, பல படிதாண்டல்களை கடந்து, இரும்புக்கதவின் தாள், கோவில் மணிபோல் ஒலிக்க, "டாண்" என்று வீட்டிற்குள் செல்கிறேன்.

"யாரு?"

"நாந்தாம்மா"

"என்னடா ... காபி குடிச்சியா ... ஆத்துக்கு வந்தோமா, கை கால் அலம்பினோமா, சந்தி பண்ணோமான்னு இல்லாம, அப்படி என்ன வெந்நீர்ல கால் வெச்சா மாறி பட படனு ஒரு ஓட்டம்"

"அய்யய்ய என்னம்மா எப்போ பாத்தாலும்"

"டேய் பேசிண்டிருக்கேன் எங்கடா போற?"

"அடாடா .. பாத்ரூம் போயிட்டு வரேன் மா"

அம்மா அதற்குப்பின் பிதற்றிக்கொண்டிருந்த எதுவும் முக்கியமில்லை. காட்சி மீண்டும் திரையிடப்படுகிறது. நிர்வாண மங்கைகள் என்னை அழைக்கிறார்கள். சிரித்துக்கொண்டே பாத்ரூமிற்குள் செல்கிறேன்.